மின் கம்பத்தில் கார் மோதி பெண் பலி
சூலுார்; சூலுார் அடுத்த இடையர் பாளையத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 55. மனைவி சாந்தாமணி, 51, மகன் தினேஷ்குமார் மற்றும் உறவினர் களுடன், இரு கார்களில் திருநெல்வேலி சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை, இடையர்பாளையம் நோக்கி வந்த போது, பாப்பம்பட்டி பிரிவு அருகே தினேஷ்குமார் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில், சாந்தாமணி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். காளிதாஸ், தினேஷ்குமாரும் காயம் அடைந்தனர். சூலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.