உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் கழுத்து அறுத்து கொலை; கோவையில் இருவருக்கு ஆயுள்

பெண் கழுத்து அறுத்து கொலை; கோவையில் இருவருக்கு ஆயுள்

கோவை; பெண்ணை கழுத்து அறுத்து கொன்ற வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பளித்தது. புலியகுளம், ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் காஞ்சனாதேவி,43. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்தார். பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். அப்போது பழக்கமான அம்மன்குளம் ரமேஷ்,43, என்பவருடன் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இருவரும் அடிக்கடி சண்டை போட்டதால், வீட்டை காலி செய்ய சொன்னார் உரிமையாளர். சவுரிபாளையம், அன்னை வேளாங்கண்ணி நகரில் வீடு இருப்பதாக அறிந்து இருவரும் சென்றனர். உரிமையாளர் மேரி ஆஞ்சலின்,43, கேட்ட வாடகைக்கு சம்மதித்து, அட்வான்ஸ் தொகை கொண்டு வருவதாக கூறி சென்றனர்.மேரி கழுத்தில் அணிந்திருந்த நகைகள் இருவர் கண்ணையும் உறுத்தியது. அவற்றை பறிக்க திட்டமிட்டனர். ”வீட்டுக்கு பெயின்ட் அடிக்க ஆட்கள் வருகிறார்கள், சாவி தாருங்கள்” என கேட்டுள்ளனர். சாவி எடுத்து வந்த மேரி ஆஞ்சலின் வீட்டை திறந்து விட்டார். மூவரும் உள்ளே நுழைந்ததும், மேரி ஆஞ்சலினை கீழே தள்ளி, 6 சவரன் தங்க நகையை பறித்தனர். தடுக்க முயன்ற மேரியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்று விட்டு நகையுடன் தப்பினர். பீளமேடு போலீசார் விசாரித்து, ரமேஷ், காஞ்சனா தேவியை கைது செய்தனர். கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாபுலால் நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கணேசன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை