மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
13-Jun-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.மேட்டுப்பாளையம் அருகே குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 47. இவர் நேற்று மதியம் அப்பகுதியில், தோட்டத்தில் மட்டை பின்னும் கூலி வேலை செய்து கொண்டு இருந்தார்.அப்போது, திடீரென புதரில் மறைந்திருந்த காட்டு பன்றி, வெளியே வந்து இவரை தாக்கியது. இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது முதுகு மற்றும் காலிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
13-Jun-2025