உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணமாம்; கழிப்பறைக்கு ஐந்து ரூபாய் கட்டணமாம்!

பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணமாம்; கழிப்பறைக்கு ஐந்து ரூபாய் கட்டணமாம்!

கோவை : கோவை, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில், பெண் பயணிகளுக்கு இலவச கழிப்பறை வசதியில்லை. வெளிப்புறத்தில் உள்ள, 'நம்ம டாய்லெட்' மற்றும் அருகாமையில் உள்ள சிறுநீர் கழிப்பறை, உபயோகத்தில் இல்லை. இதனால் பெண்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.கோவை, காந்திபுரத்தில் டவுன் பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதிவிரைவு பஸ் ஸ்டாண்ட் உள்ளது. டவுன் பஸ் ஸ்டாண்ட்டை, தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனர்.இவர்களுக்கு, கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டியது மிக முக்கியம். இதற்கேற்ப பஸ் நுழையும் பகுதியிலும், வெளியேறும் பகுதியிலும் கட்டண முறை கழிப்பறை மற்றும் குளியலறை வசதி, மாநகராட்சியால் செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோல், போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கழிப்பறையும், கட்டண முறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.பஸ்சில் இருந்து இறங்கியதும், பயன்படுத்தும் வகையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள், பயணிகளுக்கு இலவச கழிப்பறை வசதி செய்து கொடுக்கவில்லை.பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெளியே, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில், ஆண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் சிறுநீர் கழிப்பறை இருக்கிறது; அதுவும், பராமரிப்பு காரணம் கூறி, மூடப்பட்டிருக்கிறது.அதன் அருகாமையில், 'நம்ம டாய்லெட்' கட்டமைப்பு உள்ளது; தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாட்டில் இல்லை. சிறுநீர் கழிப்பிடம் பயன்படுத்த முடியாததால், 'நம்ம டாய்லெட்'டுக்குள் ஆண்கள் சென்று, சிறுநீர் கழிக்கின்றனர். பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.பெண் பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்ட் பகுதியில், எந்தவொரு இடத்திலும் இலவச கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை, கட்டண கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அங்கு, ஒரு நபருக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். பெண்கள் பஸ்சில் பயணிப்பதற்கு இலவச வசதி செய்து கொடுத்துள்ளது தமிழக அரசு.ஆனால், மிக முக்கிய தேவையான கழிப்பறையை பயன்படுத்த, ஒருவருக்கு மாநகராட்சி நிர்வாகம் ஐந்து ரூபாய் வசூலிக்கிறது. இது, பெண் பயணிகள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெண் பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்ட் பகுதியில், எந்தவொரு இடத்திலும் இலவச கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை, கட்டண கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது, பெண் பயணிகள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gajageswari
பிப் 05, 2025 07:16

அங்கேயும் ₹10 தான் வாங்குவாங்க போர்டு தான் ₹5. ஊழல் ஆரம்பம்


அப்பாவி
பிப் 04, 2025 09:08

வீட்டிலேயே போயிட்டு வரவேண்டியது தானே? அங்கேயும் இல்லியா? கிழிஞ்சுது.


arasiyal kelvi tv
பிப் 04, 2025 08:26

அரசுக்கு வரும் வருமானத்தில் இருந்து இலவசங்களை மக்களுக்கு கொடுத்தால் தவறில்லை ஆனால் அரசு உலக வங்கியில் கடனை வாங்கி மக்களுக்கு இலவசங்களை கொடுப்பது தவறு 1995ம் ஆண்டு கடனில்லா மாநிலமாக இருந்த நம் தமிழ் நாடு இன்று எட்டு இலட்சம் கோடிக்குமேல் கடன் பெற்று வட்டி கட்டி வருகிறது அந்த வட்டி எங்கிருந்து கட்ட படுகிறது சிந்தித்து பாருங்கள் எனவேஅரசு தரும் இலவசங்களை புறக்கணிப்போம் நன்றி


அப்பாவி
பிப் 03, 2025 11:23

ஓசி சோறு பக்கம் பக்கமா போடுறாங்க. கழிப்பறைதான் இல்லை.


K.J.P
பிப் 03, 2025 13:29

ஏன் அங்கேயும் கட்டணக் கழிப்பிடம் போட வேண்டியதுதானே.ஐந்து ரூபாய் தர மாட்டார்களா.


Sridhar
பிப் 03, 2025 10:40

நமக்கு எல்லாமே இலவசமாகவே வேண்டும் 5 ரூபாய் கூடவா எல்லோருக்கும் குடுக்க முடியாது ஏதோ 100 200 என்றால் பெரிய விஷயம்


K.J.P
பிப் 03, 2025 13:03

பத்து ரூபாய்க்கு வழியில்லாமலா இலவச பயணம் செய்கிறார்கள்.


சமீபத்திய செய்தி