உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்கள் ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்

பெண்கள் ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்

கோவை; பெண்களுக்கான ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான, மாவட்ட கால்பந்து அணித் தேர்வு நேற்று நடந்தது.கோவை சுங்கம், பிஷப் அம்ரோஸ் கல்லுாரியில் நடந்த தேர்வில், மாவட்டத்தில் உள்ள விவேக் வித்யாலயா, அதியானா பள்ளி, கலைவாணி மாதிரிப்பள்ளி, மணிஸ் பள்ளி, யுவா பப்ளிக் பள்ளி, பி.வி.பி., பர்ஸ்ட் கிக் அகாடமி, செயின்ட் ஆன்ஸ் பிருந்தாவன் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவிகள் பங்கேற்றனர். மொத்தம், 63 வீராங்கனைகள், தேர்வில் பங்கேற்றனர். மாநில பயிற்சியாளர் அஸ்மத்துல்லா, செல்வகுமார், அஜேஷ் தலைமையிலான தேர்வுக்குழு வீரர்களின் உடற்தகுதி, தனித்திறன்களை ஆய்வு செய்தனர்.இவர்களில் இருந்து சிறந்த திறன்களை வெளிப்படுத்திய, 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இரு நாட்களில் துவங்க உள்ள பயிற்சி முகாமில், இவர்கள் பங்கேற்பர். அணிகள் புறப்படும் முன், 18 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவர். கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் அனில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை