உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகள் உதவி மையத்தில் வேலை

குழந்தைகள் உதவி மையத்தில் வேலை

கோவை: காந்திபுரம் குழந்தைகள் உதவி மையம் 1098ல் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் சமூகப்பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவும், அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவமும்; 42 வயதுக்கு உட்பட்டவராக இருப்பதும் அவசியம். மாதம் ரூ.21 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ் நகல்களுடன் நவ., 15ம் தேதி மாலை 5:45 மணிக்குள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், கலெக்டர் அலுவலகம், கோவை –641 018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !