நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் வேலை
கோவை: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், கோவையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள, மருத்துவம் சார்ந்த பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவமனை பணியாளர்கள் 26 பேர், பல் மருத்துவ உதவியாளர் 2 பேர், பல் மருத்துவ பிரிவு டெக்னீசியன் ஒருவர், இயன்முறை மருத்துவ நிபுணர் ஒரு இடத்திற்கும், தற்காலிக பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். மருத்துவ பணியாளர்கள் பிரிவுக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு, 35 வயதுக்கு கீழ் இருப்பதுடன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் அவசியம்.பல் டெக்னீசியன் பணிக்கு, 20 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளோமா முடித்து இருப்பதுடன், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். முழுமையான விபரங்களை, கோவை பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க, வரும் 13ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.