இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி இறப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே காளிபாளையத்தை சேர்ந்தவர் அமராவதி,55. இவர், நல்லிக்கவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.நேற்று மதியம் தொழிற்சாலையில், இயந்திரம் அருகே துாய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டார்.அப்போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில், அமராவதியின் சேலை மற்றும் தலையில் கட்டியிருந்த துண்டு சிக்கி இழுத்தது.கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.