உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுங்கு பறிக்க பனை மரம்  ஏறிய தொழிலாளி பலி

நுங்கு பறிக்க பனை மரம்  ஏறிய தொழிலாளி பலி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பனைமரத்தில் நுங்கு பறிக்க ஏறிய தொழிலாளி கீழே விழுந்து இறந்தது குறித்து, வடக்கிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அருகே, வடக்கிபாளையம் நாராயணசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வீரன்,42. இவர், நேற்று சென்னியூரில் நுங்கு பறிக்க பனை மரத்தில் ஏறினார். எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.அவரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து, வடக்கிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ