உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி

தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே உள்ள, தனியார் கம்பெனியில் வடமாநில தொழிலாளி குடி போதையில் மழை நீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபின்குமார் கிரி, 31, கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், கம்பெனி வளாகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியின் திட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். போதை அதிகமான நிலையில், மழைநீர் சேகரிப்பு தொட்டியினுள் தவறி விழுந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி