உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் கொலை வழக்கில்  தொழிலாளிக்கு ஆயுள் சிறை

பெண் கொலை வழக்கில்  தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கோவை; மதுக்கரை அருகே உள்ள குமாரபாளையம், அம்மன் கோவில் வீதியில் வசித்தவர் மருதம்மாள்,58. நந்தினி, ராதாமணி என இரு மகள்கள். நந்தினிக்கு திருமணமாகி, கணவரை விட்டு பிரிந்து மருதம்மாளுடன் வசித்து வந்தார். நந்தினியின்சித்தப்பா மகன் மனோஜ்குமார்,35, அதே பகுதியில் வசித்து வந்தார். வெல்டிங் தொழில் செய்து வந்தார். நந்தினியிடம், மனோஜ்குமார், 5,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். பல முறை கேட்டும் திருப்பிக் கொடுக்கவில்லை. 2019, ஜூலை, 14ல், பணத்தை கேட்ட போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மனோஜ் கு மார் ஆத்திரமடைந்து, மருதம்மாள், நந்தினி, ராதாமணி ஆகியோரை முள் கம்பால் சரமாரியாக தாக்கினார். மருதம்மாள் உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். மதுக்கரை போலீசார் விசாரித்து, மனோஜ் குமாரை கைது செய்தனர். அவர் மீது, கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சிவகுமார், குற்றம் சாட்டப்பட்ட மனோஜ்குமாருக்கு ஆயுள் சிறை, 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் எஸ்.மோகன்பிரபு ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை