உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி

ஆனைமலை ; ஆனைமலை அருகே காளியாபுரத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், 40. இவர், கடந்த, 3ம் தேதி தோட்டத்தில் மட்டை எடுத்து கொண்டு இருந்த போது, பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ