உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலை செய்த இடத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வேலை செய்த இடத்தில் தொழிலாளி உயிரிழப்பு

நெகமம்: நெகமம் அருகே உள்ள தனியார் நூல் மில்லில் வேலைக்கு சென்ற தொழிலாளி உயிரிழந்தார். திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள், 42. இவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன், நெகமம் கொண்டேகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலைக்கு சேர்ந்து, அங்கேயே உறவினர்களுடன் தங்கினார். இந்நிலையில், உடல் நல பாதிப்பால், நேற்று முன்தினம் உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார். நேற்று காலை எழுந்திருக்காமல் இருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !