உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் தொழில்நுட்பத்தில் நவீனம் குறித்த பயிலரங்கு

வேளாண் தொழில்நுட்பத்தில் நவீனம் குறித்த பயிலரங்கு

கோவை : எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரியின் இயந்திர பொறியல் துறை மற்றும் டி.என்.எஸ்.சி.எஸ்.டி. சார்பில், 'அக்ரி டெக் 4.0' எனும் நவீன வேளாண்மைக்கான முன்னோடி தொழில்நுட்பங்கள் குறித்த, மூன்று நாள் நிகழ்ச்சி நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குனர் சித்தார்த்தன், தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர்கள் கார்த்திகேயன், ஜான்சன், குமாரி சுகிதா, மொபிடெக் வயர்லெஸ் சொல்யூஷன்ஸ் தேவேந்திரன், பிளையர்ஸ் ட்ரோன் டெக் அபிஷேக், சைபர் கிராப்ட் ரகோத்தமன் ஆகியோர் அமர்வுகளில் பங்கேற்றனர். நவீன பாசனம், நீர் மேலாண்மை, நோய் கட்டுப்பாடு, வேளாண்மையில் டிரோன் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. எஸ்.என்.எஸ். தலைவர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், முதல்வர் செந்துார் பாண்டியன், துணை முதல்வர் தமிழ்செல்வம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை