உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக தியான தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக தியான தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி : திருப்பூர் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பில் உலக தியான தினத்தையொட்டி, சிறப்பு தியானம் நடந்தது.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பூங்கா மைதானத்தில், காலை 6:00 முதல் 7:30 மணி வரை, சிறப்பு கூட்டு தியானம் நடந்தது. நகராட்சி கமிஷனர் கணேசன், பிரம்மகுமாரர்கள், பிரம்மகுமாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வால்பாறை

வால்பாறை பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளியில் தியானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது.நிகழ்ச்சியில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் வால்பாறை பொறுப்பாளர் கற்பகம் பேசுகையில், '' இளம் வயது முதல் மாணவர்கள் தியானத்தை கற்றுக்கொள்வது மிக அவசியம். தியானத்தின் வாயிலாக மன அமைதியை காணலாம். தியானத்தின் வாயிலாக மனத்தில் தீய எண்ணங்கள் மறையும். வயது முதிர்ந்தவர்கள் காலை, மாலை நேரங்களில் அவரவர் இல்லங்களில் தியானம் செய்வதால், உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்,'' என்றார்.நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை