மேலும் செய்திகள்
எழுத்தாளர் சந்திப்பு
02-Sep-2025
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
வால்பாறை; வால்பாறையில், எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க துவக்க விழா நடந்தது. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கிளை துவக்க விழா, வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு எழுத்தாளர் சுனில்லால்மஞ்ஞாலுமூடு தலைமை வகித்தார். ஆசிரியர் அழகுராணி வரவேற்றார். புதிய கிளையின் தலைவராக ஆசிரியர் அருண்பாண்டி, செயலாளராக ஆசிரியர் அருணா, பொருளாளராக ஆசிரியர் அருள்ஜோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஆறு செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில், தமிழ்நாடு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாலசாகித்யபுரஸ்கார், எழுத்தாளர் உதயசங்கர் ஆகியோர், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களும், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
02-Sep-2025
05-Sep-2025