உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

கோவை; மத்திய அரசு வழங்கும், பத்ம விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்காக கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், சிவில்சேவைகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில், சிறந்த சாதனைகள் மற்றும் சிறப்பு சேவை செய்தவர்கள் இனம், தொழில், பதவி மற்றும் பாலின வேறுபாடுகள் இன்றி, இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம். இதற்காக, தமிழக அரசு விருதுகள் இணையதளத்தில், https://awards.tn.gov.inபதிவு செய்யலாம். டாக்டர்கள், விஞ்ஞானிகளை தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களும், பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தகவலை, கோவை கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை