உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அட்மிஷன் வழங்க மறுத்தால் புகார் அளிக்கலாம்: கலெக்டர்

அட்மிஷன் வழங்க மறுத்தால் புகார் அளிக்கலாம்: கலெக்டர்

- நமது நிருபர் -கோவை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டால், பெற்றோர் தயங்காமல் புகார் அளிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை நோக்கமாகக் கொண்டு சில அரசு பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாகவும், சில பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பெற்றோர் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து கோவை கலெக்டர் கூறுகையில், “மாணவர் சேர்க்கை தொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர்களை அழைத்து, உரிய அறிவுரை வழங்கியுள்ளோம். எனினும், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மறுக்கப்படும் பட்சத்தில் பெற்றோர் புகார் அளிக்கலாம். புகார் கிடைத்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை