உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாடு மேய்க்கலாம் மரம் வளர்க்கலாம்

மாடு மேய்க்கலாம் மரம் வளர்க்கலாம்

கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக, கன்றுக்குட்டிகள் வளர்ப்பு, மரம் வளர்ப்பு குறித்த இளவச விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன. கோவை, தடாகத்தில் விவசாய தோட்டத்தில் வரும் 16ம் தேதி இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில், வேளாண் காடு வளர்ப்பு, உணவுக் காடு, தோட்டக்கலைப் பயிர் சாகுபடி, இயற்கை வேளாண்மை, கோழி வளர்ப்பு, கன்றுக் குட்டிகள் வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், கார்பன் டிரேடிங், யானை—விவசாயிகள் முரண்பாட்டில் பயிர் சாகுபடியில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கம் பெறலாம். பங்கேற்புக் கட்டணம் இல்லை. ஆனால், முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு, 99524 28313 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி