உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது வாங்க வேண்டியது... ரோட்டிலேயே குடிக்க வேண்டியது! சுந்தராபுரம் காமராஜர் நகரில் அலப்பறை

மது வாங்க வேண்டியது... ரோட்டிலேயே குடிக்க வேண்டியது! சுந்தராபுரம் காமராஜர் நகரில் அலப்பறை

கால் இடறும் பாதசாரிகள்

ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், சக்தி நிறுவனம் எதிரில், நடைபாதை சிலேப் உடைந்துள்ளது. நடந்து செல்வோர் கால் இடறி கீழே விழுகின்றனர். குழந்தைகளும் விழுந்து காயம் படுகின்றனர். உடைந்த சிலேப்பை சரிசெய்ய வேண்டும்.- யுவராஜ், திருமகள் நகர்.

சேதமடைந்த மின்கம்பம்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 98வது வார்டு, 'எஸ்.பி -39, பி -12' என்ற எண் கொண்ட கம்பம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. கம்பம் கீழே விழுந்து விபத்து நிகழ்வதற்கு முன், உடனடியாக மாற்ற வேண்டும்.- சங்கர், 98வது வார்டு.

குடிமகன்களால் நெருக்கடி

சுந்தராபுரம், காமராஜ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுவாங்கும் சிலர் ஆங்காங்கே சாலையோரம் அமர்ந்து மது அருந்துகின்றனர். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண்கள், மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். வாகனங்களையும் சாலையில் தாறுமாறாக நிறுத்துகின்றனர். மாலை நேரங்களில் இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. - தங்கவேல், சுந்தராபுரம்.

கடும் துர்நாற்றம்

பி.என்.புதுார், 75வது வார்டு, புளியமரம் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள, கிரீன் அவென்யூவில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாருவதில்லை. கால்வாயில் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.- முத்துகுமாரசாமி, பி.என்.,புதுார்.

வேகத்தடை வேண்டும்

தொண்டாமுத்துார் ரோடு, கியூரியா கார்டன் சந்திப்பில் அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. பாதசாரிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். சாலையைக் கடக்க முயலும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது. இப்பகுதியில் வேகத்தடை அமைப்பதன் மூலம், விபத்துகளை தடுக்கலாம்.- செல்வம், வடவள்ளி.

கால்வாயில் குவியும் குப்பை

நரசிம்மநாயக்கன்பாளையம், வரசித்தி விநாயகர் கோவில் அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில், தினமும் பலர் குப்பையை வீசுகின்றனர். பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குப்பையை அகற்றுவதுடன் மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க, நடவடிக்கை வேண்டும்- தங்கமணி, நரசிம்ம நாயக்கன்பாளையம்.

அடிக்கடி விபத்து

ரயில்வே நிலையம் எதிரே, கீதா ஓட்டல் எதிரே சாலையில் பாதாள சாக்கடை சிலேப் உடைந்து குழியாக உள்ளது. நடந்து செல்வோர், பைக்கில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். புதிய சிலேப் கொண்டு பாதாள சாக்கடையை மூட வேண்டும்.- பிரபு, காந்திபுரம்.

தடுமாறும் வாகன ஓட்டிகள்

சிங்காநல்லுார், ஏழாவது வீதி, ஐயர் லே-அவுட் பகுதியில், சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே குழாய் சீரமைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மண் கொண்டு மூடப்பட்டுள்ளது. மேடு, பள்ளமாக உள்ள சாலையில் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. - சங்கர், சிங்காநல்லுார்.

மூச்சை முட்டும் துர்நாற்றம்

சின்னவேடம்பட்டி கால்வாய் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. கால்வாயிலும், கால்வாய் ஓரத்திலும் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. மாதக்கணக்கில் தேங்கியுள்ள கழிவுகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையால், கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.- நாராயணன், சின்னவேடம்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை