மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
18-Oct-2025
கோவை: 'டேட்டிங்' செயலி மூலம் இளம்பெண்ணிடம் பழகிய வாலிபர் அவரை மிரட்டி நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண், கடந்த ஆறு மாதங்களாக பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில், 'கண்டென்ட்' எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். நான்கு நாட்களுக்கு முன் 'டேட்டிங்' செயலி வாயிலாக கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தருண், 28 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 2 ம் தேதி மாலை 6.00 மணிக்கு அந்த பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என, செயலி மூலம் தருண் தகவல் அனுப்பினார். அதன் பின் அந்த பெண்ணை மாலை 7.00 மணிக்கு பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு கோவை க.க. சாவடி பகுதிக்கு சென்றார். அங்குள்ள தனியார் கல்லூரிக்கு அருகில் இருக்கும் குளத்தின் அருகே வாகனத்தை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தருண் அவரது நண்பர் தனுஷ், 28 க்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். அவர் அங்கு வந்ததும், இருவரும் சேர்ந்து, பெண்ணை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்கமோதிரம், செயின், பிரேஸ்லெட் என, மூன்று பவுன் நகைகள் பறித்தனர். மேலும், ரூ.90 ஆயிரத்தை அவரது மொபைல்போனில் இருந்து யு.பி.ஐ., செயலி மூலம் பறித்துக் கொண்டனர். பிறகு அந்த பெண்ணை கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் முன் இறக்கி விட்டுச் சென்றனர். அப்போது அந்த பெண் தருணிடம் இரவு 11.00 மணி ஆகிவிட்டதால் விடுதிக்குள் அனுமதிக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார். இதையடுத்து தருண், பெண்ணின் மொபைல் வாயிலாக கோவை -திருச்சி ரோட்டில் உள்ள ஓட்டலில் அறை புக் செய்து கொடுத்தார். அங்கு சென்ற பெண் தனது சகோதரியிடம் நடந்தவற்றை கூறினார். இதையடுத்து அங்கு வந்த சகோதரி, இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வழக்கு பதியப்பட்ட தனுஷ், போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
18-Oct-2025