உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ்காரரை திட்டி தாக்கிய வாலிபர் கைது

போலீஸ்காரரை திட்டி தாக்கிய வாலிபர் கைது

கோவை, : கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் அசோக்குமார். இவர் நேற்று முன்தினம், கோவை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர், ரயில்வே ஸ்டேஷன் முன் நின்றிருந்த பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருந்தார்.பெட்டிக்கடைக்காரரை மிரட்டி சிகரெட் கேட்டார். இதை பார்த்த போலீஸ்காரர் அசோக்குமார், மதுபோதையில் இருந்த நபரை, அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ்காரரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினார். அங்கிருந்த பொதுமக்கள், போதை ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர்.இதையடுத்து அசோக்குமார், சக போலீஸ்காரர்கள் உதவியுடன் அந்த நபரை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். விசாரித்ததில் அந்த நபர் ராமநாதபுரம், சவுரிபாளையம் பிரிவு, திருவள்ளுவர் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார், 34 என்பது தெரிந்தது.போலீஸ்காரர் அசோக்குமார் புகாரின் படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷ் குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ