உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதியவர் கொலை; வாலிபர் கைது

முதியவர் கொலை; வாலிபர் கைது

கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு கடை முன், கடந்த மாதம், 27-ம் தேதி இரவு முதியவர் ஒருவர் தலையில் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சீனிவாசன், 50 என்பதும், அதே பகுதியில் தங்கி, பிச்சை எடுத்து வந்ததும் தெரிந்தது. அதே பகுதியில் பிச்சை எடுத்த சிவகங்கை திருப்புவனத்தை சேர்ந்த வேல்முருகன், 36 என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சீனிவாசனை கட்டையால் தாக்கி, கொலை செய்து, தப்பியது தெரிந்தது. தலைமறைவாக இருந்த வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி