உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிக்கினார் திருட்டு இளைஞர்

சிக்கினார் திருட்டு இளைஞர்

கோவை; கோவை செல்வபுரம், செட்டி வீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம், 36; இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பீரோ திறக்கும் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தார். வீட்டுக்குள் ஒருவர் இருப்பது தெரியவந்தது. ஸ்ரீராமை பார்த்த அந்த வாலிபர், தப்பி ஓட முயன்றார். பீரோவில் இருந்து ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் வாட்ச் ஒன்றை திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. ஸ்ரீராம் அவரை துரத்திப் பிடித்து, செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த ராகுல், 23 என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை