உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் இளைஞர் காயம்

வாகன விபத்தில் இளைஞர் காயம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார். பொள்ளாச்சி, சேத்துமடையை சேர்ந்தவர் விஷ்ணு, 26, தனியார் கம்பெனி பணியாளர். இவர், பைக்கில் கோவை நோக்கி சென்ற போது, கிணத்துக்கடவு, கோவில்பாளையம் 'யு டேர்ன்' பகுதி அருகே, 'ஒன் வே'யில் வேகமாக வந்த கார் விஷ்ணு மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த விஷ்ணுவை அங்கிருந்தோர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை