மேலும் செய்திகள்
தப்பியோட முயன்ற ரவுடிக்கு 'மாவுக்கட்டு'
28-Mar-2025
'யு டியூப்' பார்த்து செயின் பறித்த இருவர் கைது
17-Apr-2025
கோவை ; சின்னியம்பாளையம் பகுதியில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர், போலீசாரிடம் இருந்து, தப்ப முயன்று, பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.புதுக்கோட்டையை சேர்ந்த ரவி கண்ணன், 22; போத்தனுார் பகுதியில் அறையெடுத்து தங்கியிருந்தார். இவர் மீது மதுரை, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. சில நாட்களுக்கு முன், சின்னியம்பாளையம் பகுதியில் பெண்ணிடம் செயினை பறித்துச் சென்றார். பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ரவி கண்ணன் நேற்று முன்தினம் அதிகாலை ஆவாரம்பாளையம் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, போலீசாரின் ரோந்து வாகனத்தை பார்த்ததும், பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரோந்து போலீசார் அளித்த தகவலின் பேரில், பீளமேடு போலீசார், ரவி கண்ணனை கைது செய்தனர்.
28-Mar-2025
17-Apr-2025