உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்வி, ஒழுக்கம் கற்று தரும் யுவா பப்ளிக் பள்ளி

கல்வி, ஒழுக்கம் கற்று தரும் யுவா பப்ளிக் பள்ளி

பெ ரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் யுவா பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் செயல்பாடு குறித்து பள்ளி அறக்கட்டளை தலைவர் அறிவரசு, பள்ளி தலைவர் சண்முகம், தாளாளர் சத்யா ஆகியோர் கூறியதாவது: 'பெற்றோரே என் தெய்வம்' என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த கல்வி, ஒழுக்கத்தை யுவா பள்ளி கற்பித்து வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு தினமும் பெற்றோரிடம், ஆசீர்வாதம் பெறும் முறையை எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம். மேலும், அன்றாடம் குழந்தைகளின் மனதில் நேர்மை பண்பை வளர்க்கும் வகையில், நீதி கதைகள் போதிக்கப்படுகின்றன. பள்ளியில் ஆண்டு விழாக்கள் நடத்தி சிறந்த பேச்சாளர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறோம். இத்துடன், தாத்தா, பாட்டிகள் தினம், பெற்றோர் தினம் உள்ளிட்டவை கொண்டாடி, உறவுகளின் உன்னதத்தை கற்பிக்கிறோம். நம் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பேணி காக்க சிறந்த நிகழ்வுகளை அவ்வப்போது உருவாக்கி நடத்தி காட்டுகிறோம். விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுதோறும் விளையாட்டு விழா நடத்துகிறோம். நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகளும் அளிக்கிறோம். வாகன வசதி உள்ளது. பாடங்கள் தவிர, பிற துறைகளிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர பயிற்சிகளை அளித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !