உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்டல அளவிலான கோகோ போட்டி

மண்டல அளவிலான கோகோ போட்டி

பெ.நா.பாளையம்,; பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த கோவை மண்டல அளவிலான கோகோ இறுதிப் போட்டியில், ராமகிருஷ்ண மிஷன் பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்றது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரியில், கோவை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே கோகோ போட்டி நடந்தது. இதில், ஐந்து கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி அணியை, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரி அணி வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு கல்லூரியின் தாளாளர் சுவாமி தத்பாசனந்தர், சிறப்பு விருந்தினர் திரிலோகமானந்தா மற்றும் கல்லூரியின் முதல்வர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் கணேசன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை