உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்டல அளவிலான எழுத்தறிவு தின கொண்டாட்டம்

மண்டல அளவிலான எழுத்தறிவு தின கொண்டாட்டம்

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே மண்டல அளவிலான எழுத்தறிவு கொண்டாட்ட திருவிழா நடந்தது.துடியலூர் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில், மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின்படி, 2027ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், 15 முதல், 60 வயது வரை உள்ள அனைவரையும் எழுத்தறிவு பெற செய்யும் பணியை, தமிழக பள்ளி கல்வித்துறையின் முறை சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மேற்கொண்டுள்ளது.இத்திட்டத்தில் செயல்படும் தன்னார்வலர்கள், கற்பிப்போர் மற்றும் கற்போருக்கான மண்டல அளவிலான, '100 சதவீத எழுத்தறிவை நோக்கி' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நரசிம்மன், எழுத்தறிவு திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். தமிழக முறை சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் நாகராஜ் முருகன், திட்ட இயக்குனர் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து, கோலம், ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தன்னார்வலர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சமக்ர சிக்சா உதவி திட்ட அலுவலர் இளமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ