உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரைவர்களுக்கு சாலை விதி விழிப்புணர்வு விளக்கம்

டிரைவர்களுக்கு சாலை விதி விழிப்புணர்வு விளக்கம்

கடலூர் : கடலூரில், அரசு பஸ் டிரைவர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. சாலை விதிகள், விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்குவது, டீசல் சிக்கனம் ஆகியவை குறித்து அரசு பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்க அரசு போக்குவரத்துத்துறை உத்தர விட்டது. அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி மேலாளர்கள் முருகானந்தம் (வணிகம்), செல்வம் (இயக்கம்), ஸ்ரீதரன் (தொழில் நுட்பம்), கிளை மேலாளர்கள் மணிவண்ணன், கணபதி ஆகியோர் டிரைவர்களுக்கு சாலை விதிகள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினர். மேலும், பஸ்சில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை