உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

புவனகிரி:நள்ளிரவில் பெண்ணிடம் தாலி செயின் பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி அடுத்த சாத்தப்பாடி புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 59. தனது மனைவி லதா, 51, மற்றும் மகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க லதா தோட்டத்து கதவை திறந்தார். அப்போது அங்கு நின்றிருந்த அடையாளம் தெரியாத ஆசாமிகள் மூவரை பார்த்து திடுக்கிட்டார்.உடன் அந்த ஆசாமிகள், லதா கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தாலி செயின் மற்றும் ஒரு சவரன் தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். திருடு போன நகைகளின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய்.இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ