| ADDED : ஜூலை 13, 2011 11:49 PM
சிறுபாக்கம்: அரசு குவாரியில் மணல் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கான வரைவோலைகளை (டிடி) அனைத்து வங்கிகளிலும் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு குவாரியில் மணல் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ஸ்டேட் பாங்க் மூலம் மட்டுமே வரைவோலையாக (டிடி) பெறப்படுகிறது.மங்களூர், சிறுபாக்கம், ராமநத்தம் உட்பட பல கிராமங்களில் அதிகளவில் அரசு மற்றும் தனியார் கட்டட கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் இந்தியன் பாங்க், பல்லவன் பாங்க், கனரா பாங்க், ஸ்டேட் பாங்க்குகள் உள்ளன.ஆனால் குவாரிகளில் மணல் பெறுவதற்கு ஸ்டேட் பாங்க் வரைவோலை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க்குக்கு மட்டுமே அனுமதித்துள்ளதால் தினமும் வரைவோலை பெற ஏராளமானோர் பாங்க்கில் குவிகின்றனர்.இதனால் உடனடியாக வரைவோலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே பிற பாங்க்குகளிலும் வரைவோலைகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.