சொற்பொழிவு நிகழ்ச்சி
புவனகிரி: திருவருள் இறைபணி மன்றம் சார்பில் சாமுண்டீஸ்வரியம்மன் கோவிலில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.இக்கோவிலில் மாதம் தோறும் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குறித்து பேசினார். நிழ்ச்சியில் சுற்று பகுதியினர் பங்கேற்றனர்.