உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்பனை 3 பேர் கைது

கஞ்சா விற்பனை 3 பேர் கைது

கடலுார் : வடலுார் அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்ட கலால் போலீசார், வடலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, ரயில்வே கேட் அருகே மொபட்டில் நின்று கொண்டிருந்த வடலுாரைச் சேர்நத் சரவணன்,24, ஜோதிமுத்து,22, கிருஷ்ணபிரசாத்,23, ஆகியோர், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. மூவரையும் பிடித்து வடலுார் போலீசில் ஒப்படைத்தனார்.போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 150கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை