மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து முதியவர் சாவு
16-Feb-2025
கடலுார்; இரண்டு கல்லுாரி மாணவிகள் உட்பட மூன்று பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் அடுத்த சிங்கிரிகுடியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் லாவண்யா,19; கடலுார் தனியார் கல்லுாரியில் பி.ஏ.,மூன்றாமாண்டு மாணவி. கடந்த 13ம் தேதி காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கீழ்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் ஜெயஸ்ரீ,25; புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த இரு சம்பவங்கள் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கோண்டூரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மகள் ஜெயஸ்ரீ,19; தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவி. நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Feb-2025