உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் வழிப்பறி ரவுடி உட்பட 4 பேர் கைது

சிதம்பரத்தில் வழிப்பறி ரவுடி உட்பட 4 பேர் கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் பிரபல ரவுடியான நெற்குன்றம் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளி நவீன் (எ) ரத்னாசபாபதி, 30. இவர் மீது 4 கொலை வழக்கு, ஏழு கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிதம்பரம் நகரில், ரவுடிகள் பதிவேட்டில் உள்ள பாஸ்கர், மணிகண்டன், பாலகுரு ஆகியோருடன் சேர்ந்து, நேற்று காலை உசுப்பூர் ரயில்வே கேட் அருகே பழனிசாமி என்பவரிடம், ரத்னாசபாபதி வழிப்பறியில் ஈடுபட்டார்.இதனையறிந்த அண்ணாமலை நகர் இனஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார், நான்கு பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை