வெறிநாய் கடித்து 4 பேர் காயம்
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வெறி நாய் கடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.பெண்ணாடம், சோழன் நகரில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேற்று காலை அப்பகுதியில் வெறி நாய் ஒன்று அதே பகுதியை சேர்ந்த சக்தி மகள் விஷ்ணுபிரியா, 16; காந்தாராவ் மனைவி நாகாயம், 60; கிருஷ்ணமூர்த்தி மனைவி பேகம், 40; மற்றும் அஞ்சலை ஆகியோரை கடித்தது.இதில் காயமடைந்த நான்குபேரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஒரு ஆட்டை வெறிநாய் கடித்தது.