கஞ்சா விற்பனை; 6 பேர் கைது
சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம், அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார், விபீஷ்ணபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, புளிச்சமேடு சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், அண்ணாமலைநகர் கொத்தங்குடிகுப்பம் கங்கநாதன் மகன் தீபக்,24; உசுப்பூர் பெரியார் தெரு புருஷோத்தமன் மகன் அபீஸ் குணா, 23; சிதம்பரம் தில்லையம்மன் கோவில் தெரு மாரியப்பன் மகன் சந்தோஷ், 22; மண் ரோடு குமார் மகன் அசால்ட் கார்த்திகேயன், 23; சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு மோகன் மகன் அருண்,36; பழைய புவனகிரி ரோடு தொழிலாளர் குடியிருப்பு சேர்ந்த பாபு மகன் முரளி விஜய், 29; என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் மீது அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.