பாலத்தில் மணல் குவியல்; விபத்து அபாயம்
கடலுார் : ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்று, மேம்பாலத்தில் மணல் குவிந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் ஆல்பேட்டையில் புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து வசதிக்காக தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பிலான பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் சாலையோரங்களில் மணல் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைகின்றனர். எனவே, மேம்பாலத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.