உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி

திட்டக்குடி, : ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுதுரை. பெங்களூருவில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக உள்ளார். இவரது மகள் தேவசேனா, 9; அதே ஊரிலுள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்தார். தாய் ஜெயலலிதா கட்டட வேலைக்காக சென்றுவிட்டார். தேவசேனா அருகிலுள்ள வீட்டு சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, இயற்கை உபாதைக்காக வயல்வெளிக்கு சென்றபோது, முத்துசாமி என்பவரின் விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.அருகில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கிணற்றில் மூழ்கிய சிறுமியை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை