உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அழிச்சிக்குடியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

அழிச்சிக்குடியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

புவனகிரி : புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் அமிர்தவல்லி கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) ஜெய்சங்கர் வரவேற்று உறுதிமொழி வாசித்தார். துணைத் தலைவர் இளையராஜா, ஆத்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி முன்னிலை வகித்தனர். பற்றாளராக ஒன்றிய மேற்பார்வையாளர் அனுசுயா பங்கேற்றார்.கூட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், போதைப் பொருளை முற்றிலும் ஒழிப்பது குறித்து உறுதிமொழியேற்றனர்.நிகழ்ச்சியில் கிராம வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர். கவுன்சிலர் சேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி