உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

புவனகிரி: புவனகிரி ஒன்றியம் சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.புவனகிரி சொக்கன்கொல்லை தொடக்கப்பள்ளியில், புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், வெள்ளி நாணயம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். ஆசிரியர் அகிலா வரவேற்றார். சிதம்பரம் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை மற்றும் சிதம்பரம் சுற்றுலா வளர்ச்சிக் குழும தலைவர் கம்பன்அம்பிகாபதி, பொருளாளர் செந்தாமரைக்கண்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். அப்போது, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை