மேலும் செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா
25-Feb-2025
சேத்தியாத்தோப்பு: மேல்வளையமாதேவியில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழாவில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவியில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகசிகாமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் நன்மாறன், ஒன்றிய பொருளாளர் சங்கரநாராயணன், ஜெயசீலன், பிரித்திவி, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் ராஜாசாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சபரிராஜன், செல்வம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவரது முன்னிலையில் கத்தாழை, வளையமாதேவி ஆகிய கிராமங்களில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் மணவாளன் தலைமையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
25-Feb-2025