உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆடு மேய்த்த முதியவர் விபத்தில் பலி

ஆடு மேய்த்த முதியவர் விபத்தில் பலி

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து வந்து செம்மறி ஆடு மேய்த்த முதியவர் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ஓகையூர் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன், 80; சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கிராமத்தில் தங்கி செம்மரி ஆடுகள் மேய்த்துவந்தார். நேற்று அங்குள்ள கூட்டுறவு சொசைட்டி அருகே ஆடுகளை ஓட்டிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது, பூதங்குடியை சேர்ந்த ராகுல், 35; என்பவர் ஓட்டிவந்த பைக், அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருசப்பன் உயிரிழந்தார்.சேத்தியாத்தோப்பு போலசீார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ