உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விலங்குகள் மூலம் பரவும் நோய் தடுப்பு விழிப்புணர்வு

விலங்குகள் மூலம் பரவும் நோய் தடுப்பு விழிப்புணர்வு

கடலுார், : கடலுார் வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடலுார் புதுப்பாளையம் கால்நடை மருத்துவனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மண்டல பூச்சியல் வல்லுநர் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட மலேரியா அலுவலர் (பொறுப்பு) மூர்த்தி, மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ் வரவேற்றார். கடலுார் கால்நடை மருத்துவமனை டாக்டர் சரவணன், விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுனர்.மருத்துவமனை முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் முருகன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்படுகளை சுகாதார ஆய்வாளர் பிரகலாதன் செய்திருந்தார். தேவனாம்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை