உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு

அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு

சிதம்பரம்: கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோப்புசுந்தர், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசுகையில், பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவுபடி, உறுப்பினர் அட்டைகள் தனித்தனியாக வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் பெறபட்டு விரைவில் வழங்கப்படும்.உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றிக்கு உழைக்க வேண்டும். வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் கிழக்கு மாவட்டம் முழுவதும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.அண்ணா பிறந்த நாள் கூட்டம் 19ம் தேதி சிதம்ரபத்தில் நடக்கிறது. மகளிரணி துணை செயலாளர் அமுதா அருணாசலம், தலைமை கழக பேச்சாளர் மணிவாசகம் பங்கேற்கின்றனர்.காட்டுமன்னார்கோவிலில் 21ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர்கள் நெல்லையப்பன் பாலாஜி, கரூர் சுந்தரம் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கு ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என பேசினார். நகர ஜெ., பேரவை செயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ