உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு போலீசார் பாதுகாப்பு பணியால் பரபரப்பு

சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு போலீசார் பாதுகாப்பு பணியால் பரபரப்பு

கடலுார்: சாலையை சீரமைக்கக்கோரி இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பரவிய தகவலால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கடலுார் அடுத்த நாணமேடு, உச்சிமேடு, சுபஉப்பலவாடி கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களுக்கு கடலுார்-புதுச்சேரி சாலை கங்கனாங்குப்பத்தில் இருந்து சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க பலமுறை அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த ஏப்., மாதம் நாணமேடு கிராம மக்கள் சாலை அமைக்காத அதிகாரிகளை கண்டித்து தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், சாலையை சீரமைக்காததை கண்டித்து, அப்பகுதி இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி சாலை கங்கனாங்குப்பத்தில், நேற்று காலை ரெட்டிச்சாவடி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், சாலை மறியல் போராட்டத்தில் இளைஞர்கள் யாரும் ஈடுபடவில்லை. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ