உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அருணாச்சலா மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா

அருணாச்சலா மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா

புவனகிரி: புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் வ .உ. சி., பிறந்த தினத்துடன் மரக்கன்று நடுதல் என முப்பெரும் விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகி ரத்தின சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் குணசேகர், சரவணன்,வனிதாரத்தின சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். கோயமுத்துார் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய சுவாமி பக்தி விரதானந்தமகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வாழ்த்தி பரிசு வழங்கினார்.பள்ளியின் கல்வி ஆலோசகர் செல்வராஜ், சமூகசேவகர் லட்சுமணன், விருதுநகர் பேராசிரியர் ராஜேந்திரன், சிதம்பரம் மகாவீர் சந்த் ஜெயின் அறக்கட்டளை செயலாளர் தீபக் குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தன்னார்வ ரத்தக்கழக அமைப்பாளர் ராமச்சந்திரன் பொதுநல சேவையை பாராட்டி மடல் வழங்கினர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.பள்ளி ஆசிரியைகள் சர்மிளா தேவி, பார்வதிமாணிக்கம் ஆகியோர் தொகுத்து வழங்கினர். தமிழ் ஆசிரியை வேல்விழி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை