மேலும் செய்திகள்
அரசு கல்லுாரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
01-Feb-2025
கடலுார்; கடலுார் எஸ்.பி.,அலுவலக வளாத்தில், நேற்று மாலை திருநங்கை ஒருவர், மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து விசாரித்தனர். அப்போது, 6 லட்ச ரூபாய் பணத்தை ஒருவரிடம் கொடுத்ததாகவும், அவர் அதை திருப்பித்தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறினார். பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அவரை கடலுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
01-Feb-2025