உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி திட்டக்குடி அருகே பரபரப்பு

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி : திட்டக்குடி அருகே வீட்டின் முன்பு மொபைலில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம், மர்ம நபர் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திட்டக்குடி அடுத்த கொட்டாரம், அண்ணா நகரை சேர்ந்தவர் பில்கேட்ஸ் மனைவி மஞ்சுளா, 23. இவர், நேற்று இரவு 9:00 மணியளவில் வீட்டு வாசலில் மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நடந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், மஞ்சுளா அணிந்திருந்த ஏழரை சவரன் செயினை பறிக்க முயன்றார். இதையறிந்து மஞ்சுளா கூச்சலிட அருகிலுள்ளவர்கள் ஓடி வருவதற்குள் செயினில் இருந்த 4 கிராம் டாலரை மட்டும் மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். மர்ம நபர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து காயமடைந்த மஞ்சுளாவை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை